உசிலம்பட்டி: பெண் சிசு உயிரிழப்பு -தலைமறைவாக உள்ள பெற்றோரை தேடும் காவல்துறை

உசிலம்பட்டி: பெண் சிசு உயிரிழப்பு -தலைமறைவாக உள்ள பெற்றோரை தேடும் காவல்துறை

உசிலம்பட்டி: பெண் சிசு உயிரிழப்பு -தலைமறைவாக உள்ள பெற்றோரை தேடும் காவல்துறை
Published on

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெண் சிசு உயிரிழந்த சம்பவத்தில் மர்மம் நீடிப்பதால், தலைமறைவாக உள்ள பெற்றோரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

பெரியகட்டளை கிராமத்தைச் சேர்ந்த முத்துப்பாண்டி, கவுசல்யா தம்பதிக்கு 3-ஆவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. கடந்த 21-ஆம் தேதி குழந்தை பிறந்த நிலையில், உடல்நலக்குறைவால் நேற்று முன்தினம் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து யாருக்கும் தகவல் தெரிவிக்காத பெற்றோர் வீட்டின் பின்புறம் குழந்தையின் உடலை புதைத்துள்ளனர். கிராம சுகாதார செவிலியர் கொடுத்த தகவலின்பேரில் விசாரணை நடத்திவரும் காவல்துறையினர், தலைமறைவான பெற்றோரை தேட தனிப்படை அமைத்துள்ளனர்.

3ஆவதாக பெண் குழந்தை பிறந்ததாலும், அதற்கு காலில் குறைபாடு இருந்ததாலும் சிசுக்கொலை செய்யப்பட்டதா என சந்தேகம் எழுந்துள்ளது. அதனால் சிசுவின் உடலை தோண்டி எடுத்து மருத்துவக்குழு மூலம் பிரேத பரிசோதனை செய்ய காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com