\
பள்ளி மாணவிகள் மீது போலீசார் தடியடி நடத்திய விவகாரம் - விசாரணைக்கு ஜார்கண்ட் அரசு உத்தரவு

பள்ளி மாணவிகள் மீது போலீசார் தடியடி நடத்திய விவகாரம் - விசாரணைக்கு ஜார்கண்ட் அரசு உத்தரவு

பள்ளி மாணவிகள் மீது போலீசார் தடியடி நடத்திய விவகாரம் - விசாரணைக்கு ஜார்கண்ட் அரசு உத்தரவு
Published on

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பள்ளி மாணவிகள் மீது காவல்துறையினர் தடியடி நடத்திய விவகாரம் குறித்து அம்மாநில அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

10,12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் முறையாக கணக்கிடப்படவில்லை எனக் கூறி தன்பாத் மாவட்டத்தில் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தன்பாத் ஆட்சியர் அலுவலகத்தில் கல்வித்துறை அமைச்சர் ஜகர்நாத் மாதோ நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நிலையில் அவரை முற்றுகையிட மாணவிகள் முயன்றதை அடுத்து காவல்துறையினர் தடியடி நடத்தி மாணவிகளை கலைத்தனர்.

மாணவிகள் மீதான இந்த தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், மாணவிகள் கல்வித்துறையிடம் முறையிடலாம் என்றும் ஜார்க்கண்ட் அரசு கூறியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com