\
திருவண்ணாமலை திமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

திருவண்ணாமலை திமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

திருவண்ணாமலை திமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
Published on

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் திமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தளவாய்நாயக்கன் பேட்டை பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகர் விஜயகுமார் மற்றும் அவரது மனைவி செல்வி ஆகியோர் அதிகாலை கோவிலுக்கு சென்றுவிட்ட நிலையில், விஜயகுமாரின் தாய் - தந்தை மட்டும் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, அவரது வீட்டிற்குள் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் வீட்டு வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம், வீட்டிற்குள் இருந்த பொருட்கள் எரிந்தன. வீட்டிற்குள் இருந்த விஜயகுமாரின் தாய், தந்தையின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டனர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் போட்டியால் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com