கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே நவமலை வனப்பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்கள் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கோரிக்கை விடுத்துள்ளனர்.
நவமலை வனப்பகுதியில் 100க்கும் மேற்பட்டோர் ஓலை குடிசை வீடுகளில் வசித்து வசிக்கின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழையால் குடிசைகள் சேதமடைந்து மக்கள் அவதி அடைந்துள்ளனர். மேலும் நவமலை மின் உற்பத்தி நிலையம் அருகில் உள்ள ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டால் ஒரு மலை கிராமமே துண்டிக்கப்படும் அபாயம் உள்ளதாக மக்கள் குமுறுகின்றனர்.
அதுமட்டுமின்றி மின் உற்பத்தி நிலையம் அருகில் இருக்கும் தங்கள் குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு இல்லாதது வேதனை அளிப்பதாகவும், விரைவில் இதற்கு தீர்வு காண வேண்டும் எனவும் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.