வீடியோ ஸ்டோரி
'யாராச்சும் ஹெல்ப் பண்ணா பரவால்ல; ரொம்ப கஷ்டமா இருக்கு' - கதறும் செங்குன்றம் மக்கள்
'யாராச்சும் ஹெல்ப் பண்ணா பரவால்ல; ரொம்ப கஷ்டமா இருக்கு' - கதறும் செங்குன்றம் மக்கள்
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அம்பேத்கர் நகர் பகுதியில் வீடுகள் நீரில் மூழ்கி உள்ளன.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. இதன்காரணமாக திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம், அம்பேத்கர் பகுதியில் உள்ள வீடுகள் நீரில் மூழ்கி உள்ளன. வீடுகள் நீரில் மூழ்கியிருப்பதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். மாற்று இடத்திற்கு செல்ல முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.