\
சொந்த கிராமத்திற்கு திரும்பினார் மாரியப்பன் தங்கவேலு.. உற்சாக வரவேற்பு அளித்த ஊர் மக்கள்!

சொந்த கிராமத்திற்கு திரும்பினார் மாரியப்பன் தங்கவேலு.. உற்சாக வரவேற்பு அளித்த ஊர் மக்கள்!

சொந்த கிராமத்திற்கு திரும்பினார் மாரியப்பன் தங்கவேலு.. உற்சாக வரவேற்பு அளித்த ஊர் மக்கள்!
Published on: 

டோக்கியோ பாரலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் இந்தியாவுக்காக வெள்ளி பதக்கம் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த வீரர் மாரியப்பன் தங்கவேலு தனது சொந்த கிராமமான பெரிய வடகம்பட்டிக்கு திரும்பியுள்ளார். அவருக்கு ஊர் மக்கள் மேளதாளங்கள் முழங்க, பட்டாசுகளை வெடித்து, பேனர் வைத்து, மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்துள்ளது. 

தீவட்டிப்பட்டி முதல் வடகம்பட்டி கிராமம் வரை அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை மாவட்ட ஆட்சித் தலைவர் கார்மேகம், சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதியின் உறுப்பினர் ராஜேந்திரன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் அவருக்கு வரவேற்பு அளித்தனர். 

ரியோ மற்றும் டோக்கியோ என இரண்டு பாராலிம்பிக்கில் பதக்கம் வென்று அசத்தியுள்ளார் அவர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com