\
”கிராமசபை போல, ஏரியா சபை, வார்டு கமிட்டி கூட்டங்கள் கொண்டுவரப்படும்” - கமல்ஹாசன்

”கிராமசபை போல, ஏரியா சபை, வார்டு கமிட்டி கூட்டங்கள் கொண்டுவரப்படும்” - கமல்ஹாசன்

”கிராமசபை போல, ஏரியா சபை, வார்டு கமிட்டி கூட்டங்கள் கொண்டுவரப்படும்” - கமல்ஹாசன்
Published on: 

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், மக்கள் நீதிமய்யம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பாளர்கள் சத்தியப் பிரமாணம் ஏற்கும் நிகழ்வு ஆன்லைன் மூலம் நடைபெற்றது. இதில், வேட்பாளர்கள், நிர்வாகிகள் என 600 பேருடன் ஆன்லைன் மூலம் கமல்ஹாசன் கலந்துரையாடினார்.

அப்போது தேர்தல் வாக்குறுதிகளை கமல்ஹாசன் வெளியிட்டார். கிராமசபை போல, ஏரியா சபை, வார்டு கமிட்டி கூட்டங்கள் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும், மனித கழிவுகளை மனிதனே அகற்றும் அவலநிலைக்கு தொழில்நுட்ப உதவியுடன் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என கமல்ஹாசன் வாக்குறுதி அளித்தார்.

தொடர்ந்து பேசிய கமல்ஹாசன், தவறு செய்பவர்கள் தான் வெட்கப்பட வேண்டும், சேவை செய்ய பெருமை கொள்ளுங்கள் என கூறினார். மேலும், தனக்கு மனிதம் பிடிக்கும் மதம் பிடிக்காது என அவர் தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com