\
மந்தைவெளியில் மின்சாரம் தாக்கி முதியவர் உயிரிழப்பு

மந்தைவெளியில் மின்சாரம் தாக்கி முதியவர் உயிரிழப்பு

மந்தைவெளியில் மின்சாரம் தாக்கி முதியவர் உயிரிழப்பு
Published on

சென்னை மந்தைவெளியில் சாலையில் தேங்கிய மழைநீரில் நடந்துசென்ற முதியவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.

திருவல்லிக்கேணியைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் மந்தைவெளியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். இவர் வீட்டிற்கு செல்வதற்காக மந்தைவெளி பேருந்து பணிமனை அருகே சாலையில் தேங்கிய மழை நீரில் நடந்து சென்றபோது மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சென்ற மின்வாரியப் பணியாளர்கள் மின்விநியோகத்தை நிறுத்தினர். இதனிடையே, போக்குவரத்து சிக்னலுக்கு செல்லும் மின் இணைப்பில் இருந்து மின்சாரம் பாய்ந்ததா அல்லது தெருவிளக்குக்கு செல்லும் மின் இணைப்பில் இருந்து மழை நீரில் மின்சாரம் பாய்ந்ததா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேநேரத்தில், முதியவர் உயிரிழப்புக்கு முன்பாக நாய் ஒன்றும் அதே இடத்தில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்ததாகவும், இது குறித்து மக்கள் தகவல் தெரிவித்தும் மின்வாரியத்தினர் துரிதமாக நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிய வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com