
கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பாவாடை என்ற 70 வயது முதியவர், தமது உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக புதுச்சேரி சென்று இருந்த போது அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்திருக்கிறார். அந்தப் பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத நிலையில் அவருடைய கூக்குரல் யாருக்கும் கேட்கவில்லை. மூன்று நாட்களுக்கு பிறகு அவ்வழியே வந்த ஒரு நபர் முதியவர் கிணற்றில் இருப்பதை அறிந்து காவல்துறையினருக்கு தகவல் அளித்திருக்கிறார். இதன்பின்னரே தீயணைப்புத் துறையினர் அங்குவந்து முதியவரை மீட்டுள்ளனர்.