தருமபுரி: கடன் செலுத்தியதற்கு தடையில்லா சான்றிதழ் வழங்க லஞ்சம்
தருமபுரி மாவட்டம் அரூரில் கடன் செலுத்தியதற்கு தடையில்லா சான்று வழங்க லஞ்சம் பெற்ற தொடக்க வேளாண்மை கூட்டுறவு செயலாளர் கைது செய்யப்பட்டார்.
கோட்டப்பட்டியைச் சேர்ந்த விவசாயி நாகராஜன் என்பவர், அரூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நில பத்திரத்தை அடமானம் வைத்து 63 ஆயிரம் ரூபாய் கடன்பெற்றுள்ளார். கடனை முழுமையாக செலுத்திய நிலையில், நில பத்திரத்தை திரும்ப பெறுவதற்கான தடையில்லா சான்று வழங்க வங்கியின் செயலாளர் முருகன் லஞ்சம் கேட்டுள்ளார்.
அதிகாரிகள் அறிவுறுத்தலின்பேரில் ரசாயனம் தடவிய 500 ரூபாய் நோட்டுகளை விவசாயி கொடுத்த போது, லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்ய முயன்றார். இதனை அறிந்த கூட்டுறவு வங்கிசெயலாளர் முருகன் கழிவறையில் பணத்தை வீசி தண்ணீரை திறந்துள்ளார். எனினும் தூய்மை பணியாளர்கள் மூலம் தண்ணீர் செல்லும் குழாயை உடைத்து பணத்தை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புத்துறையினர், முருகனை கைது செய்தனர்.