பண்டிகை நெருங்கும் நேரத்திலும் விற்பனை சரிவர இல்லை - வியாபாரிகள் கவலை
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், துணிக்கடைகள், நகைக்கடைகள், அலங்காரப்பொருட்கள் விற்கும் கடைகளுக்கு கூட்டம் வரத்தொடங்கியுள்ளது. இந்த பண்டிகைக் காலம் பொருளாதாரத்தை மீட்டெடுக்க உதவுமா? பார்க்கலாம் இந்தத் தொகுப்பில்.
சென்னையின் முக்கிய வர்த்தக மையங்களில் ஒன்றான தியாகராய நகரில், பண்டிகைக் காலங்களில் கூட்டத்தை கட்டுப்படுத்த பாதுகாப்பை பலப்படுத்த வேண்டிய சூழல் கொரோனாவுக்கு முன் இருந்தது. கொரோனா பெருந்தொற்று கடந்த 2 ஆண்டுகளில் ஏற்படுத்திய சரிவை இந்த பண்டிகை காலமும் சரிசெய்யவில்லை என்கிறார்கள் தியாகராய நகர் வியாபாரிகள்.
சிறு மற்றும் குறு வியாபாரிகள், கொரோனாவுக்கு முந்தைய நிலைமையை எட்ட இன்னும் 2 அல்லது 3 வருடங்கள் கூட ஆகும் என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள். கொரோனா பேரிடரும் அதைத்தொடர்ந்து விதிக்கப்பட்ட ஊரடங்கும் மக்களை பெரும் பொருளாதார பாதிப்புக்கு ஆளாக்கியுள்ள சூழலில், அந்த நிலைமை சீராகி சாமானிய மக்களிடம் பணப்புழக்கம் அதிகரித்தால்தான் பொருளாதாரமும், வாழ்வாதாரமும் முன்னேறும் என்பதே களநிலவரமாக இருக்கிறது.