\
நீலகிரி: யானை சேரனுக்கு மீண்டும் கண் பார்வை கிடைத்தது

நீலகிரி: யானை சேரனுக்கு மீண்டும் கண் பார்வை கிடைத்தது

நீலகிரி: யானை சேரனுக்கு மீண்டும் கண் பார்வை கிடைத்தது
Published on

நீலகிரி மாவட்டம் முதுமலையில், வனத்துறையினரின் தொடர் சிகிச்சை காரணமாக, வளர்ப்பு யானை சேரனுக்கு மீண்டும் கண் பார்வை கிட்டியுள்ளது.

தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில், பராமரிக்கப்பட்டு வரும் சேரன் யானை, ஏற்கெனவே இடது கண் பார்வையை இழந்துள்ளது. இந்நிலையில், கடந்த ஜூன் மாதம், யானையை குளிக்க வைக்கும்போது, அதன் பாகன் குச்சியால் தாக்கியுள்ளார். இதில் யானையின் வலது கண் பார்வையும் பாதிக்கப்பட்டது. இதனால் நடந்து செல்வதற்கு யானை சிரமப்பட்ட நிலையில், வனத்துறையினரின் தொடர்சிகிச்சை காரணமாக, தற்போது யானைக்கு வலது கண் பார்வை மீண்டும் கிடைத்துள்ளது. இதனால் யானை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com