Ajit Doval met with UAE President Twitter
வீடியோ ஸ்டோரி
இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கு முக்கியத்துவம் கொடுத்து பேசிய அமீரக அதிபர்!
பிரதமர் மோடியின் அமீரக பயணத்தின் போது கவனம் ஈர்த்த முக்கிய நிகழ்வு
பிரதமர் மோடியுடன் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்ற இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கு முக்கியத்துவம் கொடுத்து அந்நாட்டு அதிபர் முகமது பின் சையத் பேசியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
பொதுவாக இதுபோன்று சந்திப்புகளின் போது இருநாட்டு அதிகாரிகளையும் தலைவர்கள் பரஸ்பரம் அறிமுகம் செய்து வைப்பது வழக்கம். அதே போல் தான் ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளை அந்நாட்டு அதிபரும், இந்திய அதிகாரிகளை பிரதமரும் ஒருவருக்கொருவர் மற்றொருவருக்கு அறிமுகம் செய்து வைத்தனர்.
அப்படி இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோபலை அறிமுகம் செய்த போது, அவரும் ஐக்கிய அரபு அமீரக அதிபரும் கைகுலுக்கி கொண்டனர். அப்போது அவருக்கு முக்கியத்துவம் கொடுத்து ஐக்கிய அரபு அமீரக அதிபர் முகமது பின் சயீத் பேசியதை பார்க்க முடிந்தது.