சிதம்பரம்: மருத்துவர் இல்லாததால் தாய் உயிரிழந்துவிட்டதாக மகன் புகார்

சிதம்பரம்: மருத்துவர் இல்லாததால் தாய் உயிரிழந்துவிட்டதாக மகன் புகார்
சிதம்பரம்: மருத்துவர் இல்லாததால் தாய் உயிரிழந்துவிட்டதாக மகன் புகார்

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததால், உரிய சிகிச்சை பெற முடியாமல் தாய் உயிரிழந்துவிட்டதாக இளைஞர் பரபரப்பு புகார் தெரிவித்திருக்கிறார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியை சேர்ந்த கோதண்டராமன். இவரது மனைவி செந்தாமரைச் செல்வி. இருவரும் கொரோனா பாதிப்பு காரணமாக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் கோதண்டராமன் கடந்த 1ம் தேதி சிகிச்சை பலன்யின்றி உயிரிழந்துவிட்டார்.

இந்நிலையில் தொடர் சிகிச்சையில் செந்தாமரைச்செல்வி மருத்துவமனையில் இருந்து வந்துள்ளார். நேற்று இரவு அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகவும், அதே சமயத்தில் மின்சாரம் இருந்தும் ஆக்சிஜன் இயந்திரங்கள் செயல்படாமல் போனதாக அவரது மகன் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், தனது தாயை காப்பாற்றக்கோரி கதறியும் மருத்துவர்கள் யாரும் வராததால் அவர் உயிரிழந்துவிட்டதாக அவர் புகார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செந்தாமரைசெல்வியின் மகன் கதறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது

இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாகவும், விசாரணை அறிக்கை வந்ததும் இது சம்பந்தமாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com