\
திருப்பதியில் சாலை தடுப்பின் மீது கார் மோதி விபத்து -  தாய், மகன் பரிதாப உயிரிழப்பு

திருப்பதியில் சாலை தடுப்பின் மீது கார் மோதி விபத்து - தாய், மகன் பரிதாப உயிரிழப்பு

திருப்பதியில் சாலை தடுப்பின் மீது கார் மோதி விபத்து - தாய், மகன் பரிதாப உயிரிழப்பு
Published on

திருப்பதியில் சாலையின் தடுப்பில் கார் மோதிய விபத்தில் தாய், மகன் உயிரிழந்தனர்.

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே மல்லவரம் பகுதியில் சாலை தடுப்பில் கார் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர். ஈரோட்டை சேர்ந்த 3 பேர் திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்ய காரில் சென்றபோது மல்லவரம் என்ற பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையின் தடுப்பு சுவரில் பலமாக மோதியது. இதில் காரின் முன் பகுதி நொறுங்கியது. இந்த விபத்தில் தாய் சரண்யா(30), மகன் மிதுன்(12) ஆகியோர் நிழ்விடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து தகவலறிந்து வந்த காவல் துறையினர் தாய், மகன் இருவரது சடலங்களை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com