\
எல்லாமே நம்ம பார்வையில்தான் இருக்கிறது... வெற்றியை உணர்த்தும் குட்டிக்கதை உங்களுக்காக!

எல்லாமே நம்ம பார்வையில்தான் இருக்கிறது... வெற்றியை உணர்த்தும் குட்டிக்கதை உங்களுக்காக!

எல்லாமே நம்ம பார்வையில்தான் இருக்கிறது... வெற்றியை உணர்த்தும் குட்டிக்கதை உங்களுக்காக!
Published on: 

எந்தவொரு விஷயத்தையும் நாம் எவ்வாறு பார்க்கிறோம் என்பதில்தான் இருக்கிறது நமக்கான வெற்றி.. இதை உணர்த்தும்விதமாக ஒரு குட்டிக்கதை இங்கே

ஷூ தயாரிக்கும் நிறுவனம் ஒன்று இரண்டு நபர்களை ஒரு நாட்டிற்கு அனுப்பி, அங்கு நமது ஷூக்களை விற்பனை செய்வதற்கு ஏற்ற சூழல் நிலவுகிறதா என ஆராய்ந்து பார்த்து வாருங்கள் என ஆலோசனைக் கேட்கிறது.

அப்படி சென்றவர்களில் முதல் நபர், நிறுவனத்தை தொடர்புகொண்டு, ‘இங்கே நமது ஷூக்களை விற்பனை செய்ய வாய்ப்வே இல்லை.. ஏனென்றால் யாரும் இங்கு ஷூக்கள் அணிவதே இல்லை’ என்கிறார்.

இரண்டு நாட்கள் கழித்து மற்றொரு நபர் நிறுவனத்தை தொடர்புகொண்டு, “கட்டாயம் நமது ஷூக்கள் இங்கு நல்ல விற்பனையாகும். ஏனென்றால் இங்கு யாருமே ஷூக்கள் அணிவதில்லை. எனவே நாம் ஷூக்கள் அணிவதன் முக்கியத்துவம் குறித்து அவர்களுக்கு எடுத்துரைக்கும்போது நிச்சயம் நமது மார்க்கெட் இங்கு சிறப்பானதாகவே இருக்கும்” என்கிறார்

அதாவது விஷயம் ஒன்றுதான். அதனை நாம் எவ்வாறு அணுகிறோம் என்பதில்தான் நமக்கான வெற்றி இருக்கிறது. ஷூவை விற்கவே முடியாது என்றவரின் பார்வையில் தோல்வி இருக்கிறது. அதேவிஷயத்தை நிச்சயம் ஷூவை விற்கலாம் என்றவரின் பார்வையில் வாய்ப்போடு வெற்றியும் இருக்கிறது. எந்தவொரு விஷயத்தையும் நீங்களும் வாய்போடு பார்த்து வெற்றிபெற வாழ்த்துகள்..

இந்த நாளும் இனிய நாளே..

<iframe width="640" height="360" src="https://www.youtube.com/embed/4ojWjCL_6rE" title="சவால்களை இப்படிப் பார்த்தால் அது வாய்ப்பு! #MorningMotivation #Inspiration #PositiveVibes" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com