minister udayanithipt desk
வீடியோ ஸ்டோரி
ஓடிசாவில் அமைச்சர்கள் உதயநிதி, எஸ்.எஸ்.சிவசங்கர்: தற்போதைய நிலவரம் என்ன?
ஓடிசாவில் நடைபெறும் மீட்பு பணிகளில் உதவுவதற்காக அமைச்சர்கள் உதயநிதி, எஸ்.எஸ்.சிவசங்கர் மற்றும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்டோர் அங்கு சென்று களத்தில் இருந்து பல்வேறு உதவிகளையும் செய்தனர்.
ஓடிசாவில் நிகழ்ந்த ரயில் கோர விபத்தில் சிக்கிய தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் முழுவதுமாக மீட்கப்பட்டு விட்டார்களா அல்லது யாரேனும் ரயில் பெட்டிகளுக்குள் சிக்கியுள்ளார்களா எனற் விபரங்கள் முழுமையாக தெரிந்த பிறகே அவர்கள் அங்கிருந்து கிளம்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Balasore Train Accident PT
இந்நிலையில் அங்கு மீட்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்திருக்கின்றன. கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் தமிழகத்தைச் சேர்ந்த 127 பேர் பயணம் செய்திருக்கிறார்கள். அதில், 96 பேர் பாதுகாப்பாக இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 31 பேருடைய நிலைமை என்னவென்று தெரியவில்லை.