“மே 2 ஆம் தேதியே தபால் வாக்குகளை எண்ண வேண்டும்” - அதிமுக கோரிக்கை

“மே 2 ஆம் தேதியே தபால் வாக்குகளை எண்ண வேண்டும்” - அதிமுக கோரிக்கை
“மே 2 ஆம் தேதியே தபால் வாக்குகளை எண்ண வேண்டும்” - அதிமுக கோரிக்கை

மே 2 ஆம் தேதியே தபால் வாக்குகளை எண்ண வேண்டும் என அதிமுக கோரிக்கை அளித்துள்ளது.

தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்த பிறகு அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தலைமை தேர்தல் ஆணையரிடம் அதிமுக சார்பில் கோரிக்கை ஒன்று அளிக்கப்பட்டது. அதாவது வாக்குகள் எண்ணும் நாளான மே 2 ல் மட்டுமே தபால் வாக்குகள் எண்ணப்பட வேண்டும் என கோரப்பட்டுள்ளது. மே 1 ஆம் தேதி தபால் வாக்குகளை எண்ணக்கூடாது.

தபால் வாக்கு எண்ணிக்கை மே 1ஆம் தேதியே நடைபெற உள்ளதாக சில மாவட்டங்களில் இருந்து புகார் வந்தது. எனவே இந்த கோரிக்கையை வைத்துள்ளோம். நடவடிக்கை எடுப்பதாக அதிகாரி தெரிவித்தார்.

தேர்தல் ஆணையம் சரியான நடவடிக்கை எடுத்து வருகிறது. குற்றச்சாட்டு இருந்தால் அதை சரிசெய்ய வேண்டியது தேர்தல் ஆணையத்தின் பொறுப்பு” எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com