கொரோனா அச்சுறுத்தல் எதிரொலி - குறைந்த மார்கழி இசைக் கச்சேரிகளின் எண்ணிக்கை

கொரோனா அச்சுறுத்தல் எதிரொலி - குறைந்த மார்கழி இசைக் கச்சேரிகளின் எண்ணிக்கை
கொரோனா அச்சுறுத்தல் எதிரொலி - குறைந்த மார்கழி இசைக் கச்சேரிகளின் எண்ணிக்கை

கொரோனா அச்சுறுத்தலால் சென்னையில் நடைபெற இருந்த மார்கழி இசைக் கச்சேரிகளின் எண்ணிக்கை பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது.

பாரம்பரிய இசைக்கு அளித்த பங்களிப்புக்காக யுனெஸ்கோவின் கிரியேட்டிவ் நகரங்கள் பட்டியலில் இடம்பெற்ற சிறப்புக்குரியது சென்னை மாநகரம். இங்கு ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் இசைக்கச்சேரிகள் நடைபெறுவது வழக்கம். கொரோனா அச்சுறுத்தல் உள்ள நிலையில் அதன் புதிய திரிபான ஒமைக்ரான் பரவல் மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சென்னையில் உள்ள சில முக்கிய சபாக்களான பாரதிய வித்யா பவன், நாரத கான சபா உள்ளிட்டவை, இசைக்கச்சேரிகளை ஆன்லைன் மூலம் நடத்த முடிவு செய்துள்ளன.

கலைஞர்கள் மற்றும் ரசிகர்களின் விருப்பத்திற்கேற்ப சில சபாக்கள் நேரடியாகவும் கச்சேரிகளை நடத்த திட்டமிட்டுள்ளன. ஆனால், வழக்கமாக நடைபெறும் கச்சேரிகளின் எண்ணிக்கை பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது. கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை கடைப்பிடித்து கச்சேரிகள் நடத்தப்படும் என்றும், அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்தும் கட்டாயம் கடைப்பிடிக்கப்படும் என்றும் சபா நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். மூத்த கலைஞர்களுக்கு வழங்கப்படும் சங்கீத கலாநிதி விருது விழா 2ஆவது ஆண்டாக ரத்து செய்யப்பட்ட நிலையில், ஆன்லைனில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com