\
திருவாரூர்: குப்பைக் கிடங்காக மாறிப்போன மனுநீதி சோழன் மணிமண்டபம்

திருவாரூர்: குப்பைக் கிடங்காக மாறிப்போன மனுநீதி சோழன் மணிமண்டபம்

திருவாரூர்: குப்பைக் கிடங்காக மாறிப்போன மனுநீதி சோழன் மணிமண்டபம்
Published on

திருவாரூரில் மனுநீதி சோழன் மணிமண்டபம் குப்பை கிடங்காக மாறியுள்ளது.

பனகல் சாலையில் உள்ள சோமசுந்தரம் பூங்காவில் மனுநீதி சோழன் மணி மண்டபம் உள்ளது. முறையான பராமரிப்பு இல்லாமல், நகராட்சி குப்பை வண்டிகளும், நாய்களின் புகலிடமாகவும் மணிமண்டபம் மாறியுள்ளது. நகராட்சி குப்பைகளும் இங்கே தான் பிரிக்கப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் மணிமண்டபத்திற்கு செல்ல முடியாத நிலை உள்ளது.

மனுநீதி சோழனின் மணிமண்டபம் இரவு நேரங்களில் மதுக் கூடாரமாகவும் மாறும் அவலநிலை உள்ளது. நீதியை நிலைநாட்ட சொந்த மகனையே தேர் ஏற்றி கொன்று தண்டனை வழங்கிய நீதிக்கு பேர் போன மனுநீதி சோழனின் மணிமண்டபம் புத்துயிர் பெற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com