\
"பிரதமர் மோடி வந்தால்தான் தடுப்பூசி போட்டுக்கொள்வேன்'' - அடம்பிடித்த கிராமவாசி

"பிரதமர் மோடி வந்தால்தான் தடுப்பூசி போட்டுக்கொள்வேன்'' - அடம்பிடித்த கிராமவாசி

"பிரதமர் மோடி வந்தால்தான் தடுப்பூசி போட்டுக்கொள்வேன்'' - அடம்பிடித்த கிராமவாசி
Published on

மத்தியபிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில், தடுப்பூசி முகாமில் பிரதமர் மோடி வந்தால்தான் தடுப்பூசி போட்டுக்கொள்வேன் என கிராமவாசி ஒருவர் கூறியது, மருத்துவ பணியாளர்களை அதிர்ச்சி அடையச்செய்தது.

கிராமங்கள் தோறும் வீடு வீடாகச் சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தும் சுகாதாரத் துறையினர், தார் மாவட்டத்தில் உள்ள கிக்காவாஸ் பழங்குடியின கிராமத்திற்கு நேற்று சென்றுள்ளனர். அங்குள்ள அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையில், ஒருவர் மட்டும் மறுத்துவிட்டார். "பிரதமர் மோடியை அழையுங்கள், அவர் இங்கு வந்தால்தான் தடுப்பூசி போட்டுக்கொள்வேன்" என்று கண்டிப்பாகக் கூறிவிட்டார்.

எவ்வளவோ வற்புறுத்தியும் அவர் ஒப்புக்கொள்ளாததால் சுகாதார குழுவினர் ஏமாற்றத்துடன் திரும்பிவிட்டனர். இந்நிலையில், அந்த கிராமவாசியை மீண்டும் அணுகி, தடுப்பூசி போடுவதற்கு சம்மதிக்க வைப்போம் என்று மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com