\
கோவை: விமானத்தில் வெடிமருந்து கொண்டு செல்ல முயன்ற நபர் கைது

கோவை: விமானத்தில் வெடிமருந்து கொண்டு செல்ல முயன்ற நபர் கைது

கோவை: விமானத்தில் வெடிமருந்து கொண்டு செல்ல முயன்ற நபர் கைது
Published on

கோவை விமான நிலையத்தில் வெடிமருந்து வைத்திருந்ததாக டெல்லியைச் சேர்ந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கோவை விமான நிலையத்தில் இருந்து மும்பை செல்லவந்த பயணியின் உடையை சோதனையிட்டபோது, அதில் இரண்டரை கிலோ எடையிலான வெடி மருந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்த விசாரணையில் அவர் டெல்லியைச் சேர்ந்த அருண் வரோரா என்பதும், தாது பொருட்கள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருவதும் தெரியவந்துள்ளது. இவருக்கு இரிடியம் மோசடியில் தொடர்பு உள்ளதா என சந்தேகம் எழுந்த நிலையில், அவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கைது செய்து சிறையிலடைத்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com