கோவை: வளர்ப்பு நாயை கொடூரமாக தாக்கிய நபர் கைது

கோவை: வளர்ப்பு நாயை கொடூரமாக தாக்கிய நபர் கைது

கோவை: வளர்ப்பு நாயை கொடூரமாக தாக்கிய நபர் கைது
Published on

கோவையில் வளர்ப்பு நாயை தாக்கிய நபரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த மாரிமுத்து என்பவர் தனது வீட்டில் வளர்த்து வந்த நாயை சரமாரியாக தாக்கி விரட்டியடித்தார். அப்பகுதி பொதுமக்கள் அவர் நாயை துன்புறுத்தும் காட்சியை செல்போனில் பதிவுசெய்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றினர். இதனையடுத்து, பிராணிகள் நல சங்க நிர்வாகி மினி வாசுதேவன், நேரில் சென்று அவரிடம் விளக்கம் கேட்டபோது, மாரிமுத்து கெட்ட வார்த்தையில் திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.மினி வாசுதேவன் கோவில்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீஸார் மாரிமுத்துவை கைது செய்தனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com