மகாளய அமாவாசை: முன்னோர்களுக்கு திதி கொடுக்க ஆற்றங்கரையில் குவிந்த மக்கள்

மகாளய அமாவாசை: முன்னோர்களுக்கு திதி கொடுக்க ஆற்றங்கரையில் குவிந்த மக்கள்
மகாளய அமாவாசை: முன்னோர்களுக்கு திதி கொடுக்க ஆற்றங்கரையில் குவிந்த மக்கள்

மகாளய அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவும் கோயில்களில் வழிபடவும் ஆற்றங்கரைகளில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

மகாளய அமாவாசை அன்று முன்னோர்களுக்கு திதி கொடுத்தால் நன்மை கிடைக்கும் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான் பொதுமக்கள் நீர்நிலைகளையொட்டி முன்னோர்களுக்கு திதி கொடுப்பார்கள். ஆனால், கடலூர் மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் திதி கொடுப்பது வழக்கம். இந்தமுறை வெள்ளிக் கடற்கரையில் மக்கள் கூடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இந்நிலையில், பொதுமக்கள் மகாளய அமாவாசையன்று திதி கொடுக்காமல் போனால் ஆசி கிடைக்காது என்ற கவலையின் காரணமாக தற்போது, கெடிலம் ஆறு, தென்பெண்ணை ஆறு போன்ற பகுதிகளில் குவிந்து முன்னோர்களுக்கு திதி கொடுத்து வருகிறார்கள்.

இதற்கிடையே மாவட்ட நிர்வாகமும் காவல் துறையினரும், வெள்ளிக் கடற்கரைக்கு யாரும் வரக்கூடாது என அனுமதி மறுக்கப்பட்ட காரணத்தால் தற்போது, கடலூர் மாவட்டம் தென்பெண்ணை மற்றும கெடிலம் ஆற்றில் குவிந்து முன்னோர்களுக்கு திதி கொடுத்து வருகிறார்கள். கூட்டம் கூடுவதை தடுக்க அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தாலும் மக்கள் கூட்டமாக கூடி தனிமனித இடைவெளியை கடைபிடித்து திதியை கொடுத்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com