\
மதுராந்தகம்: திமுக ஆதரவுடன் ஒன்றியக்குழு தலைவர் பதவியை கைப்பற்றிய அதிமுக

மதுராந்தகம்: திமுக ஆதரவுடன் ஒன்றியக்குழு தலைவர் பதவியை கைப்பற்றிய அதிமுக

மதுராந்தகம்: திமுக ஆதரவுடன் ஒன்றியக்குழு தலைவர் பதவியை கைப்பற்றிய அதிமுக
Published on

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் திமுக ஆதரவுடன் ஒன்றியக்குழு தலைவர் பதவியை அதிமுக கைப்பற்றியது.

22 ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கொண்ட மதுராந்தகத்தில், திமுக 10, அதிமுக 7, பாஜக 1, விடுதலை சிறுத்தைகள் 1, சுயேட்சைகள் 3 இடங்களை பெற்றிருந்தனர். ஒன்றியக்குழு தலைவருக்கான மறைமுகத் தேர்தலில், அதிமுகவை சேர்ந்த கீதா, திமுகவிலிருந்து ஒப்பிலால், பத்மபிரியா என மூவர் போட்டியிட்டனர். அதில், கீதாவுக்கு 10 வாக்குகளும், பத்மபிரியாவுக்கு 7 வாக்குகளும், மற்றொரு திமுக வேட்பாளரான ஒப்பிலாலுக்கு 5 வாக்குகளும் கிடைத்தன. ஒருவருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், குறைந்த வாக்குகளை பெற்ற ஓப்பிலால் விலகிக் கொண்டார். 2ஆவது முறையாக கீதா, பத்மப்ரியாவுக்கு இடையே தேர்தல் நடைபெற்றது. அதில், திமுகவினர் உட்பட 15 பேரின் வாக்குகளை பெற்று அதிமுகவின் கீதா ஒன்றியக்குழு தலைவராக வெற்றி பெற்றார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com