மதுரை நெகிழ்ச்சி: 2500 அடி மலை கிராமத்திற்கு நடந்தே சென்று ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியர்

மதுரை நெகிழ்ச்சி: 2500 அடி மலை கிராமத்திற்கு நடந்தே சென்று ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியர்
மதுரை நெகிழ்ச்சி: 2500 அடி மலை கிராமத்திற்கு நடந்தே சென்று ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியர்

2500 அடி உயர மலை மேல் உள்ள கிராமத்திற்கு சென்று அங்குள்ள குழந்தைகளுக்கு இலவசமாக ஆங்கில வகுப்பெடுக்கும் தன்னார்வல ஆசிரியரின் செயல் நெகிழ்ச்சியை உருவாக்கியிருக்கிறது.

மதுரை, திண்டுக்கல் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள மலையூர் மலை கிராமங்களில் வாழும் பள்ளி குழந்தைகளுக்கு கொரோனா பேரிடர் காலத்தில் இலவசமாக ஆங்கில வகுப்பு எடுத்து அக்கிராம குழந்தைகளின் முன்னேற்றத்திற்காக வாழ்வில் ஒளி ஏற்றி வைப்பதற்காக வாரம் இரண்டு நாட்கள் 2500 அடி உயரமுள்ள மலைக்கு நான்கு கிலோமீட்டர் கரடுமுரடான பாதைகளை சவாலுடன் கடந்து ஆங்கில வகுப்பெடுக்கும் சமூக அக்கறை கொண்ட ஆசிரியராக பாலமுருகன் திகழ்கிறார்.

மதுரை மாவட்டம் பாலமேடு அடுத்துள்ளது மலையூர் மலை கிராமம், இந்த கிராமத்தின் குடியிருப்புப் பகுதிகள் திண்டுக்கல் மாவட்டத்திலும், விவசாய விளைநிலங்கள் மதுரை மாவட்டத்திலும் உள்ளது. இந்த கிராமம் சற்று ஏறக்குறைய தரையிலிருந்து 2500 அடி உயரத்தில் மலையில் அமைந்துள்ளது.

இந்த ஊரில் 450 க்கும் மேற்பட்ட குடும்பங்களில் 1500 பேர்  வசித்து வருகின்றனர். 100 க்கும் மேற்பட்ட குழந்தைகள் பள்ளி செல்லும் வயதில் உள்ளார்கள், நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோய் பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்தாலும் இணையவழியில் ஆன்லைன் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது. ஆனால்,  இந்தக் கிராமத்தில் உள்ள மலைகிராம மாணவ, மாணவிகளுக்கு அது போன்ற எந்தவிதமான வகுப்புகளும் எடுக்கப்படுவதில்லை. சாதாரண நாட்களிலேயே மலையூர் கிராமத்தில் உள்ள துவக்கப் பள்ளியில் ஆசிரியர் வாரத்திற்கு இரண்டு நாட்களே வந்து சில மணி நேரங்கள் மட்டுமே பாடம் நடத்தி செல்வதாக குற்றச்சாட்டை அக்கிராம மக்கள் முன்வைக்கின்றனர். இதனால் அந்த கிராமத்தை சேர்ந்த மாணவ மாணவிகளின் அடிப்படை கல்வி கேள்விக்குறியாகி இருந்தது.

 இந்த நிலையில் மதுரை கடச்சநேந்தல் பகுதியைச் சேர்ந்த ஆங்கில ஆசிரியர் பாலமுருகன், கடந்த சில மாதங்களாக தொடர்ந்து வாரத்தில் இரண்டு நாட்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மலையூர் கிராமத்திற்கு சென்று அங்குள்ள குழந்தைகளுக்கு ஆங்கில வகுப்பு எடுத்து வருகிறார்.

சேவை மனப்பான்மையுடன் இது போன்று கடந்த 35 ஆண்டுகளாக மதுரை மாவட்டம் மட்டுமல்லாது சிவகங்கை  , திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள 450 க்கும் மேற்பட்ட பல்வேறு கிராமங்களுக்குச் சென்று அந்த குழந்தைகளின் ஆங்கில மொழித் திறனை ஊக்குவித்து வருகிறார். இதுவரை சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு பாலமுருகன் ஆங்கில மொழியில் சரளமாக பேசவும் எழுதவும் ஆங்கில மொழி திறமையை வளர்த்துள்ளார்.

குழந்தைகளின் குறிப்பாக கிராமத்தில் வசிக்கின்ற பள்ளிக் குழந்தைகளின் ஆங்கில திறனை ஊக்குவிப்பது தான் னது நோக்கமாக உள்ளதாகவும், மலையூர் கிராமம் அடிப்படை வசதிகளுக்கு கூட குறைந்தபட்சம் ஐந்து கிலோமீட்டர் இந்த கிராம மக்கள் பயணித்தாக வேண்டிய நிலையில் இருக்கும் மிகவும் பின்தங்கிய கிராம்ம் என்று ஆங்கில ஆசிரியர் பாலமுருகன் கூறுகின்றார்.

திங்கள் முதல் வெள்ளி வரை 5 நாட்களில் பல்வேறு பகுதிகளுக்கு இருசக்கர வாகனங்களில் சென்று காலை முதல் இரவு வரை ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்புகள் எடுப்பதன் மூலம் கிடைக்கும் வருவாயின் ஒரு பகுதியை குடும்பத்திற்கு மற்றும் தனது செலவிற்கு பயன்படுத்தும் பாலமுருகன் மேலும் ஒரு பகுதி வருவாயை மலையூரில் வசிக்கும் குழந்தைகளின் ஆங்கில வகுப்பிற்காக செலவிடுகின்றார் .

மதுரை கடச்சநேந்தல் பகுதியிலிருந்து இரு சக்கர வாகனத்தில் பாலமேடு அடுத்த எல்லை வரை செல்லும் பாலமுருகன் மலையின் அடிவார பகுதியான எண்ணெய் பாறையில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அங்கிருந்து மாற்று உடை மற்றும் தண்ணீர் கேன் உடன் மலை ஏற ஆரம்பிக்கும் ஆங்கில ஆசிரியர் பாலமுருகன் மிகுந்த சிரமங்களுக்கு பின்னர் மறையூர் கிராமத்திற்கு செல்கின்றார் இவரை பார்த்தவுடன் கல்வி பசியில் இருக்கும் ஏழை எளிய மலைக்கிராம மாணவ-மாணவிகள் மகிழ்ச்சியுடன் ஓடிவந்து அந்த கிராமத்தில் உள்ள துவக்கப் பள்ளியில் ஒன்று கூறுகின்றனர் அதனையடுத்து ஆங்கில ஆசிரியர் பாலமுருகன் கற்றுத்தரும் ஆங்கில வழிக் கல்வியை ஆர்வமுடன் கற்றுக் கொள்கின்றனர்

நகர்ப்புறத்தில் வாழ்கின்ற குழந்தைகளோடு ஒப்பிடுகையில் இந்த குழந்தைகளின் கற்றல் திறன் மேம்பட்டுள்ளது என்றும்  , அனைத்து கிராம குழந்தைகளுக்கும் என்னால் இயன்ற ஆங்கில மொழி கற்பிக்கும் சேவையை தொடர்ந்து செய்ய இருப்பதாகவும் , தனக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் கல்வித்துறை அமைச்சர் ஆகியோர் உதவி செய்திட வேண்டுமெனவும் பாலமுருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com