வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை; கடலுக்குச் செல்லாததால் கவலையில் 10,000 மீனவர்கள்!

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை; கடலுக்குச் செல்லாததால் கவலையில் 10,000 மீனவர்கள்!

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை; கடலுக்குச் செல்லாததால் கவலையில் 10,000 மீனவர்கள்!
Published on

வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக கடந்த ஐந்து நாட்களாக கடலுக்குச் செல்லாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக நாகை மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குச் செல்லக்கூடாது என மீனவர்களுக்கு கடந்த 16 ஆம் தேதி மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்தது. இதனால் நாகை மாவட்டத்தில் உள்ள கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை வெல்லப்பள்ளம் உள்ளிட்ட 15 கிராமங்களைச் சேர்ந்த 10 ஆயிரம் மீனவர்கள் கடந்த 5 நாட்களாக கடலுக்குச் செல்லாமல் உள்ளனர்.

இதனால் வேதாரண்யம் கடற்பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது. மீன்பிடி சீசன் தொடங்கியுள்ள நிலையில். கடல் சீற்றம், காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக கடந்த ஒருமாத காலத்தில் 20 நாட்கள் கடலுக்குச் செல்லாததால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com