\
பேச்சுவார்த்தையின்போது காவலர் மீது தாக்குதல் - வடமாநில லாரி ஓட்டுநர் கைது

பேச்சுவார்த்தையின்போது காவலர் மீது தாக்குதல் - வடமாநில லாரி ஓட்டுநர் கைது

பேச்சுவார்த்தையின்போது காவலர் மீது தாக்குதல் - வடமாநில லாரி ஓட்டுநர் கைது
Published on

சென்னை போரூரில் போக்குவரத்து காவலரை தாக்கிய வடமாநில லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

போரூரில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்ட சாலையில் மகாராஷ்டிரா பதிவெண் கொண்ட லாரி ஒன்று சென்றுள்ளது. அதனை நிறுத்திய போக்குவரத்து காவலர், லாரி ஓட்டுநரை வேறு பாதையில் செல்ல அறிவுறுத்தியுள்ளார். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டதால் லாரி ஓட்டுநர் திடீரென போக்குவரத்து காவலரை தாக்கியுள்ளார்.

இது தொடர்பான வீடியோ வெளியான நிலையில், புகாரின்பேரில் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து லாரி ஓட்டுநர் முஸ்தாக் அகமதுவை காவல்துறையினர் கைது செய்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com