போரூர் ஏரியில் மருத்துவக்கழிவுகள் கொட்டினால் நடவடிக்கை - மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை

போரூர் ஏரியில் மருத்துவக்கழிவுகள் கொட்டினால் நடவடிக்கை - மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை

போரூர் ஏரியில் மருத்துவக்கழிவுகள் கொட்டினால் நடவடிக்கை - மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை
Published on

போரூர் ஏரியில் குப்பை மற்றும் மருத்துவக்கழிவுகளை கொட்டினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை குடிநீர் ஆதாரங்களுள் ஒன்றான போரூர் ஏரியில் மருத்துவக் கழிவுகள் கொட்டுவது தொடர்பாக புதிய தலைமுறையில் செய்தித் தொகுப்பு வெளியானது. இந்த நிலையில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் காரம்பாக்கம் கணபதி, மற்றும் அதிகாரிகள் போரூர் ஏரியில் ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஏரியை சுற்றி சுவர் எழுப்ப இருப்பதகாவும் குப்பை மற்றும் மருத்துவக் கழிவுகளை கொட்டினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com