வீடியோ ஸ்டோரி
மத்திய பிரதேசம்: ஓடும் ரயிலில் ஏற முயன்றபோது தவறி விழுந்த பெண்
மத்திய பிரதேசம்: ஓடும் ரயிலில் ஏற முயன்றபோது தவறி விழுந்த பெண்
மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் ஓடும் ரயிலில் ஏற முயன்றபோது கால் இடறி தவறி விழுந்த பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
கணவர் மற்றும் குழந்தையுடன் பெண் ஒருவர் ஊருக்கு செல்வதற்காக ரயில்நிலையம் வந்தார். அப்போது, அவர்கள் ஏற வேண்டிய ரயில் மெல்ல நகரத் தொடங்கியது. உடனே அந்த பெண்ணின் கணவர் குழந்தையை வாங்கிக் கொண்டு ரயிலில் ஏறிவிட்டார். அதனைதொடர்ந்து அந்த பெண்ணும் ரயிலில் ஏற முயன்ற போது, கால் இடறி கீழே விழுந்தார்.
அப்பெண் ரயில் சக்கரத்தில் சிக்கவிருந்த நிலையில் அருகில் இருந்தவர்கள் அவரை கண் இமைக்கும் நேரத்தில் வெளியே இழுத்து காப்பாற்றினர். அங்கிருந்தவர்கள் போட்ட கூச்சலால் ரயில் உடனே நிறுத்தப்பட்டது. நல்வாய்ப்பாக காயம் எதுவும் இன்றி அந்த பெண்மணி உயிர் பிழைத்தார்.