வீடியோ ஸ்டோரி
”ஒரு பெண்ணை சட்டசபைக்கு அனுப்ப வேண்டும் என மக்கள் ஆர்வமாக இருக்கின்றனர்” - குஷ்பு
”ஒரு பெண்ணை சட்டசபைக்கு அனுப்ப வேண்டும் என மக்கள் ஆர்வமாக இருக்கின்றனர்” - குஷ்பு
ஒரு பெண்ணை சட்டசபைக்கு அனுப்ப வேண்டும் என மக்கள் ஆர்வமாக இருப்பதாகவும், தாமரை சின்னம் ஏற்கனவே தமிழக மக்களிடம் நன்கு அறிமுகமாகி உள்ளதாகவும் ஆயிரம் விளக்கு தொகுதியின் பாஜக வேட்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார்.
பரப்புரையின் போது புதிய தலைமுறைக்கு பேட்டியளித்த அவர் இதனைத் தெரிவித்தார். எல்டாம்ஸ் சாலையில் உள்ள முருகன் கோயிலில் இருந்து பரப்புரை தொடங்கிய குஷ்புவிற்கு அக்கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது, வெற்றி வேட்பாளர் என்ற பெயரில் கட்சியினருடன் குஷ்பு கேக் வெட்டினார்.

