5 மர்ம மரணங்கள்..கோடநாடு கொலை, கொள்ளை வழக்கின் பின்னணி என்ன? - விரிவாக பார்க்கலாம்

5 மர்ம மரணங்கள்..கோடநாடு கொலை, கொள்ளை வழக்கின் பின்னணி என்ன? - விரிவாக பார்க்கலாம்
5 மர்ம மரணங்கள்..கோடநாடு கொலை, கொள்ளை வழக்கின் பின்னணி என்ன? - விரிவாக பார்க்கலாம்

தற்போது மீண்டும் பேசு பொருளாகியிருக்கும் கோடநாடு விவகாரத்தின் பின்னணி குறித்து விரிவாக பார்க்கலாம்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள கோடநாடு எஸ்டேட்டுக்கு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சசிகலாவின் உறவினர்கள் இளவரசி, டிடிவி தினகரன், சுதாகரன் ஆகிய 5 பேர் பங்குதாரர்கள். 900 ஏக்கரில் பரந்து விரிந்து காணப்படும் இந்த எஸ்டேட் 1994ஆம் ஆண்டு 9 கோடியே 50 லட்ச ரூபாய்க்கு வாங்கப்பட்டது. ஆனால் இன்றைய மதிப்பு 1000 கோடி ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா, இளவரசி, சுதாகரன், டிடிவி தினகரன் ஆகியோர் சிறையில் இருந்த போது 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி கோடநாடு எஸ்டேட்டில் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் அரங்கேறின. நள்ளிரவில் பங்களாவுக்குள் புகுந்த கொள்ளையர்கள் எஸ்டேட் காவலாளி ஓம் பகதூரை கொடூரமாக கொலை செய்தனர். மற்றொரு காவலாளியான கிருஷ்ணன் துபே தாக்கப்பட்டு மயக்கமடைந்தார். 

கொள்ளைச் சம்பவத்தில் முக்கிய ஆவணங்கள் தங்க மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக அப்போது கூறப்பட்டது. ஆனால், போலீஸ் விசாரணையில் வெறும் விளையாட்டுப் பொருட்களும், சில கடிகாரங்கள் மட்டுமே காணமால் போனதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், கொலை மற்றும் கொள்ளையில் தொடர்புடையதாக கூறப்பட்ட ஜெயலலிதாவுக்கு கார் ஓட்டுராக இருந்த கனகராஜ், கொள்ளை நடந்த ஒரு சில நாட்களில் சேலம் ஆத்தூரில் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது, கார் மோதி உயிரிழந்தார்.

காவலாளி கொலை சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவராக கருதப்பட்ட சயான் குடும்பத்துடன் கேரளாவுக்கு காரில் தப்பி செல்லும்போது விபத்தில் சிக்கினார். அவரது மனைவி, மகள் ஆகியோர் உயிரிழந்தனர். சயான் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதேபோன்று கோடநாடு எஸ்டேட் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் தினேஷ் அதே ஆண்டில், ஜூலை 5ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இவர் கோடநாடு எஸ்டேட்டின் சிசிடிவி பணிகள் பார்வையிடுவது, எஸ்டேட் வரவு செலவுகளை பார்த்துக்கொள்வது போன்ற முக்கிய பணிகளில் ஈடுபட்டிருந்தார். இதில், குறிப்பிட வேண்டிய அம்சம் என்னவென்றால் அத்தனை பாதுகாப்பு உள்ள அந்த பங்களாவில் கொள்ளை நடந்த அன்றைய தினம் மட்டும் சிசிடிவி கேமராக்கள் வேலை செய்யவில்லை.

5 மர்ம மரணங்களை உள்ளடக்கிய கோடநாடு வழக்கில் தொடக்கத்தில் இருந்தே பல மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்படாமல் இருப்பது பெரும் சந்தேகத்திற்குரியதாக உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com