\
'நல்லா நடனம் ஆட்றீங்க' - கிரண் ரிஜிஜூவை பாராட்டிய பிரதமர் மோடி

'நல்லா நடனம் ஆட்றீங்க' - கிரண் ரிஜிஜூவை பாராட்டிய பிரதமர் மோடி

'நல்லா நடனம் ஆட்றீங்க' - கிரண் ரிஜிஜூவை பாராட்டிய பிரதமர் மோடி
Published on

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ, அருணாச்சல பிரதேசத்துக்கு பயணம் சென்றிருந்தபோது, உள்ளூர் மக்களுடன் இணைந்து நடனமாடிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.

காஸாலாங் கிராமத்தில் வளர்ச்சிப் பணிகளை மேற்பார்வையிட மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ சென்றிருந்தார். அப்போது அங்கு வசிக்கும் மக்கள் நடனமாடி அவரை உற்சாகப்படுத்த அவரும் நடனமாடி அவர்களை மகிழ்வித்தார்.

இந்த வீடியோ குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு நன்றாக நடனமாடுகிறார், அருணாச்சல பிரதேசத்தின் கலாசாரத்தை காண்பது மகிழ்ச்சியாக உள்ளதென தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com