வீடியோ ஸ்டோரி
‘ஸ்டாலின்’ காரணப்பெயர்தான்; ‘அய்யாதுரை’தான் திட்டமிடப்பட்ட பெயர்: முதல்வர் ஸ்டாலின் பேச்சு
‘ஸ்டாலின்’ காரணப்பெயர்தான்; ‘அய்யாதுரை’தான் திட்டமிடப்பட்ட பெயர்: முதல்வர் ஸ்டாலின் பேச்சு
பிறக்கும் பிள்ளைகளுக்கு அழகான தமிழ் பெயரை சூட்டுங்கள் என திருமண விழா ஒன்றில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மணமக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி முருகனின் இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மணமக்களை வாழ்த்தி பேசினார். பிறக்கும் பிள்ளைகளுக்கு அழகிய தமிழ் பெயரை சூட்டுங்கள் என வலியுறுத்திய அவர், சகோதரர்கள் மு.க.முத்து, மு.க.அழகிரி ஆகியோரின் பெயர்களை குறிப்பிட்டு, தங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் தமிழ் பெயரே என சுட்டிக்காட்டினார்.
தமக்கு ஸ்டாலின் என பெயர் சூட்டுவதற்கு முன்பாக அய்யாதுரை என பெயர் சூட்ட முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி எண்ணியிருந்ததையும் அவர் நினைவு கூர்ந்தார்.