\
கர்நாடகா டூ தமிழ்நாடு: வனப் பகுதிக்குள் இடம்பெயர்ந்த 70 காட்டு யானைகள்

கர்நாடகா டூ தமிழ்நாடு: வனப் பகுதிக்குள் இடம்பெயர்ந்த 70 காட்டு யானைகள்

கர்நாடகா டூ தமிழ்நாடு: வனப் பகுதிக்குள் இடம்பெயர்ந்த 70 காட்டு யானைகள்
Published on: 

கர்நாடகாவில் இருந்து கூட்டமாக இடம்பெயர்ந்த சுமார் 70க்கும் மேற்பட்ட யானைகள் தமிழக எல்லையான ஜவளகிரி வனப்பகுதியில் தஞ்சம் அடைந்துள்ளன.

கர்நாடகாவின் காவிரி வனவிலங்கு சரணாலயத்தில் இருந்து ஆண்டுதோறும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் யானைகள் தமிழக வனப்பகுதிக்கு இடம்பெயர்வது வழக்கம். அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கர்நாடகாவில் இருந்து 70க்கும் மேற்பட்ட யானைகள் தமிழக வனப்பகுதி நோக்கி இடம்பெயரத் தொடங்கின.

இதில் 70 யானைகள் தற்போது தமிழக எல்லையான ஜவளகிரி காப்புக்காட்டு வனப்பகுதியில் தஞ்சம் அடைந்துள்ளன. அங்கிருந்து தேன்கனின்கோட்டை வனப்பகுதிக்குள் யானைகள் நுழையாதவாறு வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com