தொகுதிப் பங்கீடு இழுபறி: கண்கலங்கிய கே.எஸ்.அழகிரி!

தொகுதிப் பங்கீடு இழுபறி: கண்கலங்கிய கே.எஸ்.அழகிரி!

தொகுதிப் பங்கீடு இழுபறி: கண்கலங்கிய கே.எஸ்.அழகிரி!
Published on

தொகுதிப் பங்கீடு முடிவுக்கு வராத நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் அவசர செயற்குழுக் கூட்டத்தில் பேசிய அதன் தலைவர் கே.எஸ். அழகிரி, திமுக தங்களை நடத்தும் விதம் குறித்து பேசி கண்கலங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திமுக கூட்டணியில் 40 தொகுதிகள் கேட்டு வருகிறது காங்கிரஸ் கட்சி. 3 கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தும் தொகுதிப்பங்கீடு முடிவுக்கு வராமல், இழுபறி நீடிக்கிறது. அதிகபட்சம் 22 இடங்கள் வரை ஒதுக்க திமுக முன்வந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில், காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் அவசர செயற்குழுக் கூட்டத்தை கூட்டி ஆலோசித்தனர். அப்போது பேசிய தலைவர் கே.எஸ்.அழகிரி, திமுக ஒதுக்க முன்வரும் தொகுதிகளின் எண்ணிக்கை குறைவு எனக் குறிப்பிட்டு பேசியுள்ளார். அதைவிட, தங்களை திமுக நடத்தும் விதம் என்று கூறியபடியே கே.எஸ்.அழகிரி கண்கலங்கியுள்ளார்.

இனி தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் பங்கேற்கப் போவதில்லை என்றும், கையெழுத்திட மட்டுமே வர உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், திமுக கூட்டணியில் எத்தனை தொகுதிகளில் போட்டியிடலாம் என நிர்வாகிகளிடம் ஒரு படிவத்தை நிரப்பச் சொல்லி பெற்றுள்ளார் கே.எஸ்.அழகிரி. அதில் குறைந்தபட்சம் 30 இடங்களிலாவது காங்கிஸ் போட்டியிட வேண்டுமென நிர்வாகிகள் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிகிறது.

முன்னதாக, தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்கு சோனியா காந்தியின் பிரதிநிதியாக வந்திருந்த கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, அறிவாலயத்தில் திமுகவின் மூத்த தலைவர்கள் யாரும் தம்மை வரவேற்கவில்லை என்று ராகுல் காந்திக்கு இ-மெயிலில் வருத்தம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com