தருமபுரி: இடியும் நிலையில் உள்ள இருளர் குடியிருப்புகள் - உயிர் பயத்தில் வாழும் மக்கள்

தருமபுரி: இடியும் நிலையில் உள்ள இருளர் குடியிருப்புகள் - உயிர் பயத்தில் வாழும் மக்கள்
தருமபுரி: இடியும் நிலையில் உள்ள இருளர் குடியிருப்புகள் - உயிர் பயத்தில் வாழும் மக்கள்

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே, 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட குடியிருப்புகள் காரை பெயர்ந்து ஆபத்தான நிலையில் இருப்பதால் அங்கு வசிக்கும் குடும்பங்கள் அச்சத்துடன் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது.

இருளப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட இந்திரா நகர், பீரங்கி நகரில் 300-க்கும் அதிகமான இருளர் இன மக்கள் வசித்துவருகிறார்கள். தினக்கூலி வேலை செய்து வாழ்க்கை நடத்தி வரும் இந்த குடும்பங்களுக்கு, 30 ஆண்டுகளுக்கு முன் அரசு சார்பில் இந்திரா நினைவு குடியிருப்பு கட்டித்தரப்பட்டது. இந்த குடியிருப்புகளின் தற்போதைய நிலை மிகமோசமாக உள்ளது. எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ள இந்த குடியிருப்புகளில் இந்த மழைநேரத்தில் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வசிப்பதாகக் கூறுகிறார்கள் குடியிருப்பு வாசிகள்.

போதிய வருவாய் இல்லாததால் வீடுகளை புதுப்பித்துக்கொள்ள முடியாத நிலை உள்ளதாக கூறும் இவர்கள், கடந்த 20 ஆண்டுகளாக, குடியிருப்புகளை புதுப்பித்துத் தரக்கோரி மனுக்களை அளித்தும் பலனில்லை என்கிறார்கள். இனியாவது தங்கள் அச்சத்தை போக்கி குடியிருப்புகளை புதுப்பித்துத் தர வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுக்கிறார்கள் மக்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com