ஆப்பிளின் iOS15 இயங்குதளம் - புதிய வசதிகள் என்ன?

ஆப்பிளின் iOS15 இயங்குதளம் - புதிய வசதிகள் என்ன?
ஆப்பிளின் iOS15 இயங்குதளம் - புதிய வசதிகள் என்ன?

குறிப்பிடதக்க மாற்றங்களுடன் ஆப்பிள் இயங்குதளமான iOS 15 அறிமுகமாகியிருக்கிறது. இதனை, ஐபோன், ஐபாட் மற்றும் ஐ-வாட்ச் பயனர்கள் தங்கள் சாதனங்களில் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

இந்தாண்டு ஜூன் மாதம் நடந்த ஆப்பிள் நிறுவனத்தின் WWDC எனும் டெவலப்பர் மாநாட்டில் iOS 15 இயங்குதளம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்தவகையில், தற்போது வெளியாகியிருக்கும் இந்த அப்டேட்டை ஐபோன், ஐபாட், ஐவாட்ச் ஆகிய சாதனங்களில் பயன்படுத்திக் கொள்ள முடியும். அந்தவகையில், வீடியோ கால் செய்யப் பயன்படும் ஃபேஸ்டைமில், புதிதாக Profile மற்றும் Grid வியூ சேர்க்கப்பட்டுள்ளது.

இதுவரை ஆப்பிள் பயனாளர்களோடு மட்டுமே பயன்படுத்திக் கொள்ள முடிந்த ஃபேஸ்டைம் அழைப்பில் இனி ஆண்ட்ராய்டு பயனாளர்களும் பங்கேற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நேரத்தில் எந்த நோட்டிபிகேஷன்களை மட்டும் பெற வேண்டும் என்பதை மாற்றிக் கொள்ளும் வசதி iOS 15-ல் இடம்பெற்றுள்ளது. ஃபோட்டோஸில் மெமரிஸ், லைவ் டெக்ஸ்ட் போன்ற வசதிகள் உள்ளன. பயனர்கள் தங்களுக்கென வடிவமைத்துக் கொள்ளும் பிரத்யேக மெமோஜிகளை மேலும் மெருகூட்டும் வசதி இடம்பிடித்துள்ளது.

சந்தையில் உள்ள மற்ற நிறுவனங்களின் தயாரிப்புகளைக் காட்டிலும் பிரைவசி மற்றும் பாதுகாப்பிற்கு ஆப்பிள் அதிக முக்கியத்துவம் கொடுக்கும். அந்தவகையில், Mail Privacy Protection என்ற புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Zero Click ஹேக்கர்களால் ஆப்பிள் சாதனங்களுக்குள் ஊடுருவ முடியாது. மேலும், ஐ ஓ எஸ்-14 ல் உள்ள ப்ரைவசி நியூட்ரிஷன் லேபிள்கள் மேம்படுத்தப்பட்டு, ஐ ஓ எஸ் -15ல் ஆப் பிரைவசி ரிப்போர்ட் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த வசதியின் மூலம், ஒரு APP நாம் கொடுத்திருக்கும் அனுமதிகளை வைத்து, எப்போது நம் தகவல்களை சேகரிக்கிறது, யாரோடு அதனை பகிர்ந்து கொள்கிறது என்பதை துல்லியமாக தெரிந்து கொள்ள முடியும். மேலும், சஃபாரி பிரவுசரில் இடம்பெற்றுள்ள பிரைவேட் ரிலே மூலம், இணையத்தில் பார்க்கும் தகவல்களை வேறு எவராலும் 100 சதவீதம் பார்க்க முடியாதபடி தடுக்க முடியும். அதே நேரம், Beta version-ல் இடம்பெற்றிருந்த ரியல் டைமில் இசை, வீடியோ உள்ளிட்டவைகளை பகிர்ந்துகொள்ளும் Screen Sharing வசதி iOS 15-ல் தற்போது இடம்பெறவில்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com