சிவசங்கர் பாபாவுக்கு உடந்தையா?- ஆசிரியைகளிடம் சிபிசிஐடி விசாரணை

சிவசங்கர் பாபாவுக்கு உடந்தையா?- ஆசிரியைகளிடம் சிபிசிஐடி விசாரணை

சிவசங்கர் பாபாவுக்கு உடந்தையா?- ஆசிரியைகளிடம் சிபிசிஐடி விசாரணை
Published on

பாலியல் வழக்கில் சிவசங்கர் பாபாவிற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் அவரது பள்ளி ஆசிரியைகளிடம் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் சுஷில் ஹரி பள்ளியின் நிறுவனரான சிவசங்கர் பாபா, பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, மூன்று போக்சோ வழக்குகளை சிபிசிஐடி காவல்துறையினர் பதிவு செய்தனர். இரண்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், சிவசங்கர் பாபாவிற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் ஐந்து பள்ளி ஆசிரியைகளுக்கு சிபிசிஐடி காவல்துறையினர் சம்மன் கொடுத்தனர்.

ஆனால் அவர்கள் தலைமறைவாகிவிட்டதாக காவலர்கள் தெரிவித்த நிலையில், நேற்று 3 ஆசிரியைகள் எழும்பூரில் உள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரானார்கள். அவர்களிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர். எப்போது அழைத்தாலும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சிபிசிஐடி காவல்துறையினர் எழுத்துப்பூர்வமாக பதிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com