\
பெற்றோரை இழந்து தவிக்கும் 4 பிள்ளைகள்: 'புதிய தலைமுறை' செய்தியால் குவியும் உதவிகள்

பெற்றோரை இழந்து தவிக்கும் 4 பிள்ளைகள்: 'புதிய தலைமுறை' செய்தியால் குவியும் உதவிகள்

பெற்றோரை இழந்து தவிக்கும் 4 பிள்ளைகள்: 'புதிய தலைமுறை' செய்தியால் குவியும் உதவிகள்
Published on

புதுக்கோட்டை மாவட்டத்தில் பெற்றோரை இழந்து தவிக்கும் 4 பிள்ளைகளுக்கு 'புதிய தலைமுறை' செய்தி எதிரொலியாக பல்வேறு உதவிகள் கிடைத்து வருகின்றன.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே செய்யானம் கிராமத்தை சேர்ந்த 4 பிள்ளைகள் தங்கள் பெற்றோரை பறிகொடுத்து தவித்து வந்தனர். இந்த 4 பிள்ளைகளும் அவர்களது பாட்டியின் ஆதரவில் இருந்தனர். இவர்களது நிலை குறித்து புதிய தலைமுறையில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக சென்னையைச் சேர்ந்த 'உதவிடத்தான் பிறந்தோம்' என்ற அமைப்பின் சார்பாக ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, கோதுமை உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன.

முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் இக்குழந்தைகளுடன் தொலைபேசியில் பேசியதுடன் 5 ஆயிரம் ரூபாயும் வழங்கி வீடு கட்ட உதவுவதாக உறுதியளித்தார். இது தவிர மேலும் பல உதவிகள் குவிந்து வருகின்றன. நால்வரின் படிப்பிற்கு உதவுவதாகவும் சிலர் வாக்குறுதி அளித்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com