`முட்டாளுக்கெல்லாம் வழிவிடறதில்லை நான்...’- சக உயிரை மதிப்பது ஏன் முக்கியம் தெரியுமா?

`முட்டாளுக்கெல்லாம் வழிவிடறதில்லை நான்...’- சக உயிரை மதிப்பது ஏன் முக்கியம் தெரியுமா?
`முட்டாளுக்கெல்லாம் வழிவிடறதில்லை நான்...’- சக உயிரை மதிப்பது ஏன் முக்கியம் தெரியுமா?

நம் வாழ்வில், நம்மை சுற்றியுள்ள பிற உயிர்களை மதிக்காமல் `தான் மட்டுமே அறிவாளி’ என்று ஒருவர் நினைப்பது ஏன் தவறு; உண்மையில் சக உயிரை மதிப்பது ஏன் முக்கியம் என்பதை உணர்த்தும் ஒரு குட்டி ஸ்டோரி இங்கே உங்களுக்காக...!

ஒரு ஊரில் வெளியே ஆறொன்று இருந்திருக்கிறது. அந்த ஊரில் இருந்து வெளியே செல்ல வேண்டுமென்றால் அந்த ஆற்றை கடந்து மட்டுமே செல்ல முடியும் என்ற நிலை. அதற்காக அந்த இடத்தில் ஒரு பாலமும் கட்டப்பட்டிருந்தது. ஆனால் அதில் ஒருநேரத்தில் ஒரு திசையிலிருந்து மட்டுமே ஒருவரால் கடக்க முடியும்.

அன்றைய தினம் முதியவர் ஒருவர் ஊரிலிருந்து வேலைக்காக வெளியே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. அதற்காக எப்போதும்போல பாலத்தை கடக்க முயன்றிருக்கிறார் அவர். ஆனால் அன்றைய தினம் எதிர்பக்கம் இருந்து இளைஞரொருவரும் கடக்க வந்திருக்கிறார். பாதி வழியை கடந்துவிட்ட அந்த முதியவர், இளைஞர் கொஞ்சம் பின் சென்றால் பாலத்தை கடந்துவிட முடியும் என்ற நிலையில் இருந்திருக்கிறார். ஆனால் அந்த இளைஞர், `வயசானவரே பின்னாடி போங்க. நான் உடனே கடக்கணும்’ என்றிருக்கிறார்.

முதியவரோ, `தம்பி நானும் செல்ல வேண்டும்’ என்றிருக்கிறார். இதைக்கேட்ட அந்த இளைஞர், `இங்கு ஒரு நேரத்தில் ஒருவரால் மட்டுமே ஆற்றை கடக்க முடியும். நான் செல்கிறேன். பொதுவாக நான் முட்டாள்களுக்கு வழிவிடுவதில்லை’ என்று கோவமாக தெரிவித்திருக்கிறார். இதைக்கேட்ட முதியவர், விட்டுக்கொடுத்து சென்றுள்ளார். இளைஞரும் வேகவேகமாக பாலத்தை கடந்துவிட்டு, அதன் இறுதியில் நின்றுகொண்டிருந்த முதியவரிடம், `முதல்லயே நான் சொன்னதை கேட்ருக்கலாம்ல...’ என கிண்டலாக சொல்லியிருக்கிறார்.

அதைக்கேட்ட முதியவர், `தம்பி நீ எங்கிட்ட என்ன சொன்னன்னு நினைவிருக்கா?’ என்று கேட்டுள்ளார். அதைக்கேட்ட அந்த இளைஞர், `முட்டாள்களுக்கு வழிவிடுவதில்லைனு சொன்னேன்’ என்றுள்ளார். அதற்கு அம்முதியவர், `நான் அப்டியில்லப்பா’ என்று சொல்லிவிட்டு ஆற்றை கடக்க சென்றுள்ளார். இதைக்கேட்ட இளைஞருக்கோ குற்ற உணர்ச்சியாகி, அங்கிருந்து நடந்து சென்றுள்ளார்.

பல தருணங்களில் நாம் இப்படித்தான் `நான் மட்டுமே அறிவாளி’ என நினைத்துக்கொள்கிறோம். இதில் ஏற்படும் அகம்பாவத்தால் எதிரில் இருப்பவரை சக உயிராக மதிக்க தவறிவிடுகிறோம். உண்மையில், சக உயிரை மதிப்பதே அறிவு! இதை உணர்ந்தால் எந்நாளும் நன்னாள்தான்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com