சாலையோர உறுதுணையற்ற மக்களுக்கு பிரியாணி வழங்கி பசிபோக்கிய வடபழனி இளைஞர்கள்

சாலையோர உறுதுணையற்ற மக்களுக்கு பிரியாணி வழங்கி பசிபோக்கிய வடபழனி இளைஞர்கள்
சாலையோர உறுதுணையற்ற மக்களுக்கு பிரியாணி வழங்கி பசிபோக்கிய வடபழனி இளைஞர்கள்

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகைகளில் மிக முக்கியமானது ஊரடங்கு. இந்த ஊரடங்கு காலத்தில் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

எனினும் ரேஷன் அட்டை இல்லாதவர்கள் முகவரி இல்லாதவர்கள் சாலையோர வாசிகளின் நிலைமையை நாம் சொல்லித் தெரியவேண்டியதில்லை. இந்த விளிம்புநிலை மனிதர்களின் பசியை போக்குவதில் தன்னார்வளர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. தமிழகம் முழுவதும் பல்வேறு தன்னார்வ அமைப்புகள் தங்களால் இயன்ற உதவிகளை இவர்களுக்கு வழங்கி வருகின்றனர்.

அதேபோல் நண்பர்கள் சிலர் இணைந்தும், மக்கனின் பசி போக்குவதில் உறுதுணை புரிந்து வருவதையும் கவனிக்க முடிகிறது. அந்த வகையில் சென்னை வடபழனியைச் சேர்ந்த ரமேஷ், ஜாபர் ஆகிய இளைஞர்கள் தங்களது நண்பர்களுடன் இணைந்து தங்கள் பகுதியைச் சேர்ந்த உறுதுணையற்ற பலரின் பசிபோக்கும் முயற்சியில், இந்த பேரிடர் காலத்தில் தீவிரம் காட்டினர்.

நாள்தோறும் நூற்றுக் கணக்கானோருக்கு பிரியாணி பொட்டலங்களை விநியோகித்தனர். இந்த நல்லுள்ளங்கள் உதவி வழங்குவதற்கு ஏதுவாக காவல் துறையினரும் உதவிகோருவோரை ஒழுங்குபடுத்தி ஒத்துழைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com