\
திருப்பூர்: மின்னல் தாக்கியதில் வீட்டு உபயோகப் பொருட்கள் எரிந்து சேதம்

திருப்பூர்: மின்னல் தாக்கியதில் வீட்டு உபயோகப் பொருட்கள் எரிந்து சேதம்

திருப்பூர்: மின்னல் தாக்கியதில் வீட்டு உபயோகப் பொருட்கள் எரிந்து சேதம்
Published on

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் மின்னல் தாக்கியதில் வாஷிங் மெஷின் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் எரிந்தன.

பாரதிநகர் பகுதியைச் சேர்ந்த சாஜிதா, 3 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். தொடர்ந்து இருதினங்களாக மழை பெய்துவந்த நிலையில் நேற்று தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு அருகிலுள்ள தாயார் வீட்டிற்கு சாஜிதா சென்றுள்ளார். அவர் புறப்பட்டுச்சென்ற 5 நிமிடங்களிலேயே அவரது வீடு மீது மின்னல் தாக்கியுள்ளது.

இதில் வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ், ஓவன் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. தாயார் வீட்டிற்கு சென்றதால் தானும் குழந்தைகளும் உயிர்தப்பியதாக கூறும் சாஜிதா, பொருட்கள் அனைத்தும் சேதமடைந்துவிட்டதால் அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com