ஹிமாச்சலின் சிம்லாவில் 2022-ன் முதல் பனிப்பொழிவு பதிவு

ஹிமாச்சலின் சிம்லாவில் 2022-ன் முதல் பனிப்பொழிவு பதிவு
ஹிமாச்சலின் சிம்லாவில் 2022-ன் முதல் பனிப்பொழிவு பதிவு

ஹிமாச்சல் பிரதேசத்தின் தலைநகரான சிம்லாவில் இந்த ஆண்டின் முதல் பனிப்பொழிவு தொடங்கியுள்ளது.

அம்மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடுமையான குளிர் நிலவியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, சுற்றுலா தலமான சிம்லா நகரின் கர்ஃபி மற்றும் நார்கண்டா பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவியுள்ளது. மாநிலத்தின் மிகக் குறைந்த வெப்பநிலையாக நேற்று கீலாங்கில் மைனஸ் 5.1 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. பழங்குடியின மக்கள் வசிக்கும் மாவட்டங்களான லாகுல்-ஸ்பிட்டி, கின்னார், பங்கி உள்ளிட்ட பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே காஷ்மீர் மாநிலம் சோபியானில் கர்ப்பிணி ஒருவர் பிரசவ வலியால் துடித்த நிலையில் கொட்டும் பனி மழைக்கிடையில் அவரை ராணுவ வீரர்கள் சுமந்து சென்று மருத்துவமனையில் அனுமதித்த சம்பவமும் நிகழ்ந்துள்ளது. கடும் பனிப்பொழிவால், அம்மாநிலத்தில் பல இடங்களில் அத்தியாவசிய மருத்துவ உதவிகளில் இதுபோன்ற சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com