குன்னூரில் பாரம்பரிய இசை முழங்க கோலாகலமாக நடந்த ஹெத்தையம்மன் பண்டிகை

குன்னூரில் பாரம்பரிய இசை முழங்க கோலாகலமாக நடந்த ஹெத்தையம்மன் பண்டிகை

குன்னூரில் பாரம்பரிய இசை முழங்க கோலாகலமாக நடந்த ஹெத்தையம்மன் பண்டிகை
Published on

நீலகிரி மாவட்டத்தில் படுகர் இன மக்களின் பாரம்பரிய விழாவான ஹெத்தையம்மன் பண்டிகை குன்னூர் ஜெகதளா கிராமத்தில் நடைபெற்றது. இந்த விழாவுக்காக அப்பகுதியை சேர்ந்த 8 கிராம மக்கள் ஒன்று கூடி வெகு விமர்சையாக நேற்று இரவு கொண்டாடப்பட்டத்தில் ஈடுபட்டனர். இரவில் வண்ண விளக்கு அலங்கார தேரில் படுகர் இன மக்களின் ஆடல் பாடலுடன் ஹெத்தையம்மன் பவனி வந்தது, காண்போரை மகிழ்வித்தது.

இவ்விழாவில் 8 கிராமத்தை சேர்ந்த 5,000-க்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் தங்கள் பாரம்பரிய வெள்ளை ஆடை அணிந்து கலந்துக்கொண்டார்கள். 40 நாட்கள் விரதமிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கையில் செங்கோல் ஏந்தி, ஜெகதளா கிராம மலை உச்சியில் உள்ள கோவிலுக்கு சென்று ஒன்றுகூடி அங்குள்ள மடிமனை ஹெத்தையம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்தனர். பின் பலவண்ண ஹெத்தை குடையுடன் பாரம்பரிய நடனமாடி, ஹெத்தை அம்மனை ஊர்வலமாக தங்கள் கிராமத்தில் உள்ள ஹெத்தை அம்மன் கோவிலுக்கு எடுத்து சென்றனர்.

இரவு ஹெத்தை அம்மனுக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் படுகர் இனமக்களின் ஆடல் பாடலுடன் திருவீதி உலா நடைப்பெற்றது. மேலும் ஹெத்தை அம்மன் கோவில் முன் வளாகத்தில் தங்கள் பாரம்பரிய கோஷமிட்டு மக்கள் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெவ்வேறு படுகர் இன மக்கள் வாழும் கிராமங்களில் வெவ்வேறு நாட்களில் இந்த பண்டிகை கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com