கும்மிடிப்பூண்டி: கிராம சபை கூட்டத்தில் அதிமுக, திமுக கட்சியினரிடையே கைகலப்பு

கும்மிடிப்பூண்டி: கிராம சபை கூட்டத்தில் அதிமுக, திமுக கட்சியினரிடையே கைகலப்பு
கும்மிடிப்பூண்டி: கிராம சபை கூட்டத்தில் அதிமுக, திமுக கட்சியினரிடையே கைகலப்பு

கும்மிடிப்பூண்டி அருகே கிராம சபை கூட்டத்தில் அதிமுக, திமுக ஆதரவாளர்களிடையே கைகலப்பு ஏற்பட்டது. அதிமுக குழு பெருந்தலைவரை கிராம சபை கூட்டத்திற்கு அழைக்கவில்லை என கேள்வி எழுப்பியதால் இரு தரப்பினர் இடையே கைகலப்பு உருவானது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஈகுவார்பாளையம் ஊராட்சி மன்ற கிராம சபை கூட்டம் சித்தூர் நத்தம் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் உஷாஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது. அந்த கூட்டத்திற்கு வந்த கும்மிடிப்பூண்டி அதிமுக ஒன்றிய குழு பெருந்தலைவர் சிவக்குமார், கிராம சபை கூட்டத்திற்கு தமக்கு அழைப்பு விடுக்கவில்லை எனவும், ஒன்றியக்குழு தலைவர் என்ற அடிப்படையில் தமக்கு அழைப்பு விடுக்கவில்லை என்றாலும் இந்த ஊராட்சியின் ஒன்றிய கவுன்சிலர் என்ற அடைப்படையில் கூட தமக்கு அழைப்பு விடுக்கவில்லை என திமுகவை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் உஷா ஸ்ரீதரிடம் கேட்டதால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

வாக்குவாதம் முற்றி திடீரென ஒன்றியக்குழு தலைவர் சிவகுமாரை பிடித்து தள்ளி இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டதால் காவல் துறையினர் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர், இதனைதொடர்ந்து கிராம சபை கூட்டமும் முடித்து வைக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com