தஞ்சையில் குழந்தை ரத்தமின்றி நரபலி - தாத்தா, பாட்டி, மந்திரவாதி கைது

தஞ்சையில் குழந்தை ரத்தமின்றி நரபலி - தாத்தா, பாட்டி, மந்திரவாதி கைது

தஞ்சையில் குழந்தை ரத்தமின்றி நரபலி - தாத்தா, பாட்டி, மந்திரவாதி கைது
Published on

தஞ்சாவூரில் 6 மாத பெண் குழந்தை தண்ணீர்த்தொட்டியில் மூழ்கடித்து கொல்லப்பட்ட விவகாரத்தில் குழந்தையின் தாத்தா - பாட்டி மற்றும் மந்திரவாதியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பேராவூரணி அருகே மல்லிப்பட்டினத்தைச் சேர்ந்த நசுருதீன் - சாலிகா தம்பதிக்கு ஹாஜாரா என்ற 6 மாத பெண் குழந்தை இருந்தது. குழந்தை தண்ணீர்த்தொட்டியில் விழுந்து இறந்துவிட்டதாக கூறிய பெற்றோர், காவல்துறைக்கு தெரிவிக்காமல் அடக்கம் செய்துள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர், குழந்தையின் உடலைத் தோண்டி எடுத்து உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். நசுருதீனின் சித்தப்பா அசாருதீனுக்கு அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், ரத்தமின்றி நரபலி கொடுத்தால் நல்லது நடக்கும் என முகமது சலீம் என்ற மந்திரவாதி கூறியிருக்கிறார்.

அதன்பேரில், நசுருதீனின் 6 மாத பெண் குழந்தையை, அசாருதீனின் மனைவி ஷர்மிளா பேகம் தண்ணீர்த்தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, அசாருதீன், ஷர்மிளா பேகம், மந்திரவாதி முகமது சலீம் ஆகியோரை கைதுசெய்த காவல்துறையினர், நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com