நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது தமிழ் மக்களுக்கு எதிரானது - பா.ரஞ்சித்

நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது தமிழ் மக்களுக்கு எதிரானது - பா.ரஞ்சித்
நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது தமிழ் மக்களுக்கு எதிரானது - பா.ரஞ்சித்

நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது தமிழ் மக்களுக்கு எதிரானது என திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

'இளைஞர்கள் பார்வையில் வடசென்னை' என்ற தலைப்பில் நடைபெற்ற புகைப்பட கண்காட்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த இயக்குநர் ரஞ்சித், " வட சென்னையை அழுக்கான, அதிகமான மக்கள் இருக்கும் இடமாகவே பார்த்திருப்போம். ஆனால் என் பார்வையில் வட சென்னை மிகவும் அழகான பகுதி, வட சென்னை மக்களுக்கு எதிரான மத்திய அரசின் போக்குகளையும் , மக்களின் இயல்பு வாழ்க்கையையும் அழகியலுடன் காட்சிப்படுத்தி உள்ளனர்.

நீட் மசோதா குறித்த ஆளுநரின் செயல்பாடு மிகவும் தவறானது என்றும், தமிழ் மக்கள் விரும்புகின்ற உணர்வை திருப்பி அனுப்புவது என்பது முற்றிலும் தமிழ் மக்களுக்கு எதிரானது" என கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com