வீடியோ ஸ்டோரி
குப்பைமேடாக மாறிய தெருவோர பூங்காவை மாற்றி மேஜிக் செய்த அரசுப்பள்ளி மாணவர்கள்!
குப்பைமேடாக மாறிய தெருவோர பூங்காவை மாற்றி மேஜிக் செய்த அரசுப்பள்ளி மாணவர்கள்!
திருவாரூரில் குப்பை மேடாக இருந்த பகுதியை சுத்தப்படுத்தி அரசுப் பள்ளி மாணவர்கள் சுவரோவியம் வரைந்துள்ளனர்.
மானந்தியார் தெருவிலுள்ள நகராட்சி தெருவோர பூங்கா பராமரிக்கப்படாமல் குப்பை போடும் இடமாக மாறியது. சுகாதாரச்சீர்கேடு ஏற்படுவதாக மக்கள் புகார் அளித்ததை அடுத்து, அதனை நகராட்சி நிர்வாகம் தூய்மைப்படுத்தியது. மீண்டும் மக்கள் குப்பை போடாமல் தடுக்கும் வகையில், அரசுப்பள்ளி மாணவர்கள் அழகாக சுவரோவியம் வரைந்துள்ளனர்.