தங்க சங்கிலியை கொரோனா நிதியாக அளிக்க முன்வந்த பெண்: அரசு வேலைக்கு பரிந்துரை

தங்க சங்கிலியை கொரோனா நிதியாக அளிக்க முன்வந்த பெண்: அரசு வேலைக்கு பரிந்துரை
தங்க சங்கிலியை கொரோனா நிதியாக அளிக்க முன்வந்த பெண்: அரசு வேலைக்கு பரிந்துரை

கொரோனா நிவாரண நிதியாக தனது மூன்றரை சவரன் நகையை வழங்க முன்வந்த கணவரை இழந்த பெண்ணுக்கு அரசு வேலை அளிக்க விருதுநகர் மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்தார்.

ராஜபாளையத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை கவிதா தனது மகனுடன் ஆட்சியர் அலுவலகம் சென்றார். அங்கு ஆட்சியர் மேகநாத ரெட்டியிடம், மூன்றரை சவரன் நகையை கொரோனா நிவாரண நிதியாக அளித்தார். ஆனால் நகையாக பெற மறுத்த ஆட்சியர், பொதுமக்களுக்கு உதவ வேண்டும் என முன்வந்த சேவையை பாராட்டி திருக்குறள் புத்தகம் பரிசளித்தார்.

மேலும் மகனின் எதிர்காலத்திற்கு நகை பயன்படும் எனக்கூறியதோடு மகனின் கல்வி செலவை அரசே ஏற்க நடவடிக்கை எடுப்பதாக கூறினார். அப்போது ஆசிரியை கவிதா கணவரை இழந்தவர் என்பது தெரியவந்ததால் அவருக்கு அரசு வேலை வழங்க ஆட்சியர் பரிந்துரை செய்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com